Valparai Summer Festival 2018

கோவை மாவட்டத்தின் கோடை வாசஸ்தலமாக வால்பாறை இருந்துவருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து இயற்கை விரும்பு சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிள் ஆழியார், டாப்சிலிப், வால்பாறை உள்ளிட் பகுதிகளை மையமாக வைத்து 2-3 நாட்கள் தங்கி இயற்கை சூழலை ரசித்து செல்வது வழக்கம்.

மேலும் வால்பாறை பகுதியில் ஏழை தோட்ட தொழிலாளா்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அவர்களையும், அவர்களது குழந்தைகளையும் மன மகிழ்ச்சியடைய செய்ய வால்பாறை பகுதியில் பொழுது போக்க தியேட்டர் மற்றும் பூங்கா உள்ளிட்ட வசதிகள் கிடையாது. இந்நிலையில் அரசு சார்பாக மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படும்.  இந்நிலையில்  வால்பாறை கோடை விழா தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது…


http://www.valparai.com/valparai-summer-festival-2017/