
வால்பாறை பகுதியில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இந்த பக்கத்தில் தொகுத்து கூறப்பட்டு உள்ளது. சுற்றியுள்ள பகுதிகளை பார்க்க குறைந்த பட்சம் 2 நாட்கள் தேவை. வால்பாறை வரும் பொழுது பிளாஸ்டிக் பை மற்றும் டம்ளா்களை எடுத்து வராதீர்கள். தவிர்த்து விடுங்கள். இயற்கை பகுதியில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை வரும்பொழுது
வால்பாறை துாய்மையான, இயற்கை கொஞ்சும் பகுதியாக விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில், ஆனைமலை குன்றுகள் மேல் வால்போன்று குறுக்காக அமைந்தள்ள இயற்கை நகரமாகும். சுற்றிலும் 3 எல்லைகளில் ஆனைமலை புலிகள் காப்பகமும், மற்றொருபுறம் கேரளாவின் இரவிகுளம் தேசிய பூங்காவும் உள்ளது. எனவே இயற்கை விரும்பிகளின் சொர்க்க பூமியாக வால்பாறை திகழ்கிறது. வால்பாறையின் கால நிலை மனதிற்கு இன்பம் கூட்டுபவையாக உள்ளது. எனவே மீண்டும் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். இங்கு உள்ள லாட்ஜ், காட்டேஜ் மற்றும் பங்களாக்கள் சுற்றுலாப் பயணிகளின் தங்கும் வசதிக்கேற்ப உள்ளது
Leave a Reply