Valparai Summer Festival 2017
வால்பாறை கோடை விழா 2017
Valparai- 2017 May:28

வால்பாறையில் மே 26ம் தேதி கோடைவிழா துவங்கியது. தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாண்புமிகு பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
கோவை மாவட்டத்தின் கோடை வாசஸ்தலமாக வால்பாறை இருந்துவருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து இயற்கை விரும்பு சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிள் ஆழியார், டாப்சிலிப், வால்பாறை உள்ளிட் பகுதிகளை மையமாக வைத்து 2-3 நாட்கள் தங்கி இயற்கை சூழலை ரசித்து செல்வது வழக்கம்.
மேலும் வால்பாறை பகுதியில் ஏழை தோட்ட தொழிலாளா்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அவர்களையும், அவர்களது குழந்தைகளையும் மன மகிழ்ச்சியடைய செய்ய வால்பாறை பகுதியில் பொழுது போக்க தியேட்டர் மற்றும் பூங்கா உள்ளிட்ட வசதிகள் கிடையாது. இந்நிலையில் அரசு சார்பாக கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களில் முடிவு செய்யப்பட்ட கோடைவிழா நேற்று காலை துவங்கியது.
தோட்டக்கலை துறை சார்பாக 12ஆயிரம் கொய் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட கங்காரு மற்றும் ஒட்டகமும், காய்கறிகளால் செய்யப்பட்ட பறக்கும் குதிரையும் காண மக்கள் திரண்டனா். வனத்துறை அரங்கில் வைக்கப்பட்டுள்ள சிறுத்தைகளை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. டேன்டீ, ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை அரங்குகள் அமைக்கபட்டு உள்ளது. ஆவின் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையும் நிலையங்கள் உள்ளது. பள்ளி வளாகத்தின் பின்புறம் உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. விழா மேடையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மாலை வரை 3 நாட்களும் நடைபெற்றது.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் திருமதி.காயத்திரி தலைமையில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோடை விழா கொடியை ஏற்றி, அரங்குகளில் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து விழாப்பேருரையாற்றினர். வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. கஸ்துாரிவாசு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கோ-ஆப் நகர வங்கி தலைவர் திரு.அமீது, துணைத்தலைவர் திரு.மயில்கணேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக வால்பாறை வட்டாட்சியர் திரு.பாஸ்கரன் வரவேற்றார், நகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன் நன்றி கூறினார்.
விழாவில் தோட்டகலைத்துறை துணை இயக்குநர்த திரு. ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.விஜயகுமார், வால்பாறை வனச்சரகர் திரு.சக்திவேல், மானாம்பள்ளி வனச்சரகர் திரு.சேகர், நகராட்சி பொறியாளா் திரு.ராஜகோபால், மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனா்.
வால்பாறை கோடை விழா நிறைவு
இந்நிலையில் மே.28ம் தேதி வால்பாறையில் 3 நாட்கள் நடைபெற்ற வந்த கோடை விழா 28ம் தேதி மாலை (ஞாயிறு) முடிவடைந்தது.

நிறைவு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி. வேலுமணி பங்கேற்று அரங்குகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், வால்பாறை கொங்கு மண்டலத்தின் இதயம் ஆகும். வால்பாறை பகுதியில் பெய்யும் மழை நீரால் ஆழியர் மற்றும் திருமூர்த்தி அணைகள் மூலம் குடிநீர் மற்றும் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே வால்பாறையின் பங்கு இதயம் போன்றது. எனவே வால்பாறை பகுதியில் தேவைகளை அறிந்து, தனியார் சாலைகளை அரசு ஏற்று, புதிய சாலைகளை அமைத்தது போல, பூங்கா அமைக்கவும், புதிய படகு துறை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான குழு அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு

உத்திரவிட்டுள்ளேன். கீழ் நீரார் அணையில் பகுகு துறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடா்பாக பேச்சுவார்த்தைகள் துவங்கப்படும், தமிழக தோட்ட உரிமையாளர்களை அழைத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேச்சுவார்தை நடத்த உள்ளார். சின்னக்கல்லார் செல்லும் சாலை வனத்துறை அனுமதிக்காக கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ரவிச்சந்திரன் வரவேற்றார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. கஸ்துாரிவாசு, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.மகேந்திரன், வால்பாறை கோ-ஆப். வங்கி தலைவர் திரு. அமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் திருமதி. காயத்திரி, வால்பாறை கோ-ஆப் வங்கி துணைத்தலைவர் திரு. மயில்கணேஷ், வால்பாறை நகராட்சி ஆணையாளா் திரு.கண்ணன், பொறியாளர் திரு.ராஜகோபால், மேலாளா் திரு.சம்பத், ஒவர்சீர் திரு. ராஜேஷ், பொள்ளாச்சி வட்டாட்சியர் திரு.ஜெயராஜ், வால்பாறை வட்டாட்சியர் திரு.பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வனச்சரகர்கள், வனவர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அலுவலர்கள், வால்பாறை வியாபாரிகள் சங்கம், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனா். விழா இனிதே மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது.
– Joshua
Leave a Reply