Chinnakallar is the second highest rainfall area in the country. Chinnakallar in Valparai records maximum rainfall next to Chirapungi in Valparai area at a distance of 17 kms. from Valparai Town. Watching the water fall in the mid green forest fields with a hanging bridge is a pleasant view for eyes.
Route Map:
Valparai – Koolangal River – Srikundra Estate – Eetiar Estate – Cinchona Estate – 2/3 Estate – Chinnakallar Dam and Falls.
Road Condition : Bad from Cinchona Forest Check Post.
Ticket: Rs.115/head.
One Response
JEBARAJ JOSHUA
சின்னக்கல்லார் அருவி, வால்பாறையில் இருந்து 17கிமீ. துாரத்தில் உள்ளது. காண அழகான இடத்தில் அமைந்துள்ள அருவியில் குளிக்க முடியாது. அருவின் மேல் பகுதியில் நீரில் இறங்கலாம். தற்போது மழை காலம் என்பதால் வழுக்கிவிட வாய்ப்புகள் அதிகம். எனவே கவனமாக இருப்பது அவசியம்
வாகன நிறுத்தத்தில் இருந்து 10 நிமிடங்கள் நடந்து அருவிக்கு செல்லவேண்டும். வனப்பகுதி வழியாக செல்லும்போது திகில் கூடும். மேலும் அங்குள்ள தொங்கு பாலத்தின் வழியாக செல்லும்போது நடந்து சென்ற திகில் பயணம் மறந்துவிடும்.
அட்டை பூச்சிகள் உள்ளதால் டெட்டால் கால்களில் தெளித்துக்கொண்டால் சிறிது தப்பிக்கலாம்.
வால்பாறையில் இருந்து கூழாங்கல் ஆறு சென்றபின், சிறுகுன்றா எஸ்டேட், ஈட்டியார் எஸ்டேட்டை அடுத்து உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் நுழைவு கட்டணம் பெற்றபின் சின்னக்கல்லார் செல்லவேண்டும். வனத்துறை சோதனைச்சாவடியை அடுத்து சின்னக்கல்லார் செல்லும் சாலை குண்டும் குழியுமாக தற்சமயம் உள்ளது.
பார்க்க கூடிய இடம். இந்தியாவின் 2வது சிறபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார் சாலை மேம்படுத்திவிட்டால், அதின் தொன்மையை உலக மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
வனத்துறையும் முறையான பாதுகாப்பு வழங்கவேண்டும்.