சோலையார் அணை நிரம்பிய நிலையில் தேயிலைத்தோட்டங்கள் தீவானது.
பி.ஏ.பி திட்டத்தில் முக்கிய பங்குவகிக்கும் சோலையார் அணை 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. எனவே பரம்பிக்குளம் அணை, ஆழியார் அணை, திருமூர்த்தி அணைகளுக்கு நீர் வரத்து விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் இந்தியாவின் சிறப்பான நீர் மேலாண்மை செய்யப்பட்ட பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் ஆசியாவின் சிறப்பான திட்டம். ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் பெய்யும் தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவழை நீர் வீண் ஆகாமல் சிற்றனைகளில் சேகரிக்கப்பட்டு சோலையர் அணை மூலம் பரம்பிக்குளம் அணையில் சேகரிப்படுகிறது. இத்திட்டத்தில் 10 அணைகள் உள்ளது. ஆறுகள் மற்றும் 10 வாய்கால்கள், 8 மலை குகை சுரங்கப்பாதைகள் மூலம் அணைகள் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம் ஆகும்.
இத்திட்டங்களின் மூலம் 5 மின்நிலையங்களில் இருந்து சுமார் 300 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 6 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் இத்திட்டத்தில் சுமார் 3 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது.
Leave a Reply