Valparai Climate, 04/01/19; Now Valparai Climate is very chill and pleasant since the migrating season many birds have landed in Valparai for breeding and for food. The wild animals also have come out of the Forests. Now Valparai stands as a feast for eyes. All the rivers are flowing so beautifully and in an unpolluted environment.
வால்பாறை டவுனில் உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஆற்று நீர 300க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். சமையல் அறை, கழிவறை களில் நீர் புகுந்ததால் மக்கள் அவதி. மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.மழை தொடர்ந்து நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறைக்கு வரும் பிரதான சாலைகளில் ஆங்காங்கே கிளைகள் ஒடிந்தும் மண் சரிவு ஏற்பட்டும் இருக்கின்றது எனவே சுற்றுலா பயணிகள் யாரும் வால்பாறைக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அங்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என வால்பாறை நிர்வாகம் அறிவுரித்தியுள்ளது.
Valparai Climate
Effects of Valparai Rain
14-08-18
வால்பாறை பள்ளிகளுக்கு இரண்டாம் நாள் மழை காரணமாக விடுமுறை(14-08-18)
12-06-18
வால்பாறை பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை(12-06-18)
வால்பாறையில் நிலவும் குளிர் மழையை முன்னிட்டு மேலும் ஒருநாள் 12/6/18 வால்பாறை தாலுக்காவில் உள்ள கல்லுாரி மற்றும் பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை, மாவட்ட ஆட்சியர் உயர்திரு. ஹரிகரன் உத்திரவின் பேரில் வால்பாறை வட்டாட்சியர் திருமதி. விஜயலட்சுமி அறிவிப்பு.
வால்பாறை பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து நீடித்து வரும் சூறைக்காற்று மற்றும் கன மழையால் இயல்பு வாழ்கை பாதிப்படைந்து உள்ளது.
வீடுகளுக்குள் நீர் புகுந்தது
கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. பாலாஜி கோவில் சாலை, சிறுகுன்றா சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.
நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. கடும் மழை மற்றும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்கை பாதிப்பு



கோவை மாவட்டம் வால்பாறையில் 2ம் நாளாக ெதாடரும் தென்மேற்கு பருவ மழையால், வால்பாறை டவுனில் உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஆற்று நீர 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். சமையல் அறை, கழிவறை களில் நீர் புகுந்ததால் மக்கள் அவதி.